தமிழ்நாடு

புதிய ஆட்சி நீண்ட காலத்துக்கு நீடிக்காது

DIN

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நீண்ட காலத்துக்கு நீடிக்காது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
கடலூரில் மாவட்ட பாமக பொதுக் குழுக் கூட்டம், வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:
தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்பார் என்று கூறப்பட்டபோது, பேராபத்து வந்துள்ளது எனக் கூறினேன். தற்போது தமிழகத்தை வி.கே.சசிகலா, டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மூலமாக 3 பேராபத்துகள் சூழ்ந்துள்ளன.
அதிமுக துணைப் பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ள தினகரன், அந்தக் கட்சியின் அதிகார மையமாக செயல்படுவார். எனவே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த ஆட்சி பொம்மை ஆட்சியாகவே செயல்படும். அதனால், இந்த ஆட்சி நீண்ட காலத்துக்கு நீடிக்காது. எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT