தமிழ்நாடு

ஈமு கோழி மோசடி வழக்கில் மூவருக்கு 5 ஆண்டு சிறை: ரூ. 43 லட்சம் அபராதம்

DIN

ஈமு கோழி மோசடி வழக்கில், அந்நிறுவனங்களை நடத்தி வந்த மூவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 43.20 லட்சம் அபராதமும் விதித்து கோவை, தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு (டான்பிட்) நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த சேகர் (27), முனியன் (40), கார்த்திகேயன் ஆகிய மூவரும் நிதி ஈமு பார்ம்ஸ், நிதி ஈமு பார்ம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், நிதி பவுல்டரி பார்ம்ஸ், நிதி பவுல்டரி இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய பெயர்களில் நான்கு நிறுவனங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரமணி என்பவர், இந்த நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, ஈரோடு மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் மனு அளித்தார். விசாரணையில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 157 முதலீட்டாளர்களிடம் ரூ. 3 கோடியே 36 லட்சத்து 62,500 மோசடி செய்யப்பட்டதாகத் தெரியவந்தது.
இது தொடர்பான வழக்கு, கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து, நீதிபதி பாபு வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
இதில், ஈமு கோழி மோசடியில் ஈடுபட்ட சேகர், முனியன், கார்த்திகேயன் ஆகிய மூவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 43 லட்சத்து 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. வசூலிக்கப்படும் அபராதத்தில் ரூ.72 ஆயிரத்தை அரசுக்கும், மீதமுள்ள ரூ.42 லட்சத்து 48 ஆயிரத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT