தமிழ்நாடு

ஒசூர் சானமாவு காட்டில் 20 யானைகள் முகாம்: கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

DIN

ஒசூர் சானமாவு காட்டில் முகாமிட்டுள்ள 20 யானைகளை தீவிரமாக கண்காணித்து வரும் வனத்துறையினர், 10 கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஒசூர் அருகே சானமாவு காட்டுக்கு வந்துள்ள 20 யானைகளை விரட்டும் முயற்சியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும், சானமாவு காட்டைச் சுற்றி உள்ள விவசாய நிலங்களில் காய்கறி, நெல், ராகி பயிர்கள் வளர்ந்துள்ளதாலும், யானைகள் இந்தப் பகுதியிலேயே முகாமிட்டு தென்பெண்ணை ஆற்றில் குளித்து, விவசாயப் பயிர்களை தின்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.
பகலில் சானமாவு காட்டுக்குள் இருக்கும் யானைகள், இரவு நேரத்தில் மட்டுமே விவசாய நிலங்களுக்குள் சென்று பயிர்களைத் தின்று வருகின்றன.
இதனால், இரவு நேரங்களில் யானைகள் கிராமங்களுக்குள் வராமல் இருப்பதற்காக வனத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சானமாவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குச் செல்ல வேண்டாம் எனவும், இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் எனவும் எச்சரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

SCROLL FOR NEXT