தமிழ்நாடு

குடிநீர் பிரச்னையைத் தீர்க்க முன்னுரிமை: முதல்வர் பழனிசாமி பேட்டி

DIN

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு போதிய பெரும்பான்மை பலம் இருந்ததால், அமைச்சரவை மீதான நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றது. 

மெரினாவில் தலைவர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் முதல்வர் பழனிசாமி. அப்போது அவர் கூறியதாவது:

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றுவதே எங்கள் குறிக்கோள். வர்தா புயல், வறட்சி நிவாரண நிதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமரைச் சந்தித்து தேவையான நிதியைப் பெறுவோம். நீட் தேர்வு சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெறப்படும். இதையும் பிரதமரிடம் எடுத்துச்சொல்வோம். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் என்பதை நிரூபித்துள்ளார்கள். அதிமுகவை அழிக்க முற்பட்டவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னையைத் தீர்க்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT