தமிழ்நாடு

நவீன எரிவாயு தகன மேடை திறக்கப்படுமா?

DIN

திருத்தணி நகராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் காட்சிப் பொருளாக இருக்கும் நவீன எரிவாயு தகன மேடையை திறக்க வேண்டும்
என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணி நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் இறந்தவர்களின் உடலை புதைக்க போதிய இட வசதி இல்லை.
மேலும், ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நந்தி ஆற்றுக்கு சென்றுதான்
இறுதி சடங்குகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
இந்நிலையில், நகராட்சி சார்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, திருத்தணி அனுமந்தாபுரம் 13-வது வார்டு பகுதியில் உள்ள சுடுகாட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 2012-13 ஆம் ஆண்டில் ரூ.50 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை இது திறக்கப்படாமல் உள்ளது. இதனை திறக்க நகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டாமல் காலம் கடத்தி வருகிறது.
எனவே இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து, நவீன எரிவாயு தகன மேடையை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT