தமிழ்நாடு

பூண்டி ஏரிக்கு இதுவரை 2 டி.எம்.சி. கிருஷ்ணா நீர்

DIN

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதியில் இருந்து சுமார் 2 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த நீர் கொள்ளளவு 11 டி.எம்.சி. ஆகும். இந்த ஏரிகளில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 1.6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. சென்னை குடிநீர் வழங்கும் மற்றொரு ஏரியான வீராணம் ஏரி வறண்டுவிட்டது.
இந்த நிலையில், கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 21-ஆம் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
தற்போது கண்டலேறு அணையில் இருந்து 1800 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த தண்ணீர், பூண்டி ஏரிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 491 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி ஏரியின் நீரின் அளவு 24.94 அடியாக உள்ளது. தற்போது 837 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
ஜனவரி 21-ஆம் தேதி முதல் தற்போதுவரையிலான கால கட்டத்தில் பூண்டி ஏரிக்கு 1.91 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்து சேர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT