தமிழ்நாடு

உலகப் பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு 3 இருக்கைகள்: சிலம்பொலி செல்லப்பன் வேண்டுகோள்

DIN

உலகப் பல்கலைக்கழகங்களில் திருவள்ளுவர், தொல்காப்பியர், இளங்கோவடிகள் பெயரில் தமிழுக்கு 3 இருக்கைகள் நிறுவ தமிழ்ப் பேராயம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் அறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன் கேட்டுக் கொண்டார்.
காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராயம் சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பனுக்கு பாரிவேந்தர் விருதுடன் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசை பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர். பாரிவேந்தர் வழங்கினார்.
இதையடுத்து, சிலம்பொலி சு.செல்லப்பன் பேசியதாவது:-
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த தமிழறிஞர்கள், எழுத்தாளர்களுக்குப் பெருந்தொகையாக ரூ.22 லட்சம் ரொக்கப் பரிசுடன் 12 வகையான விருதுகள் வழங்கப்படுவது பாராட்டுக்குரியது.
எனது (சிலம்பொலி செல்லப்பன்) முன்னாள் மாணவரான பச்சமுத்து, இன்று பாரிவேந்தராக உயர்ந்துள்ளது மகிழ்ச்சி. மேலும், தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களுக்கு பெருந்தொகை வழங்கி கெளரவித்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
"எங்கு இல்லை நம் தமிழர் இனம்' என்று பெருமிதம் கொள்ளும் வகையில் உலகெங்கும் பரந்து விரிந்து வாழ்ந்து வரும் தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் மேலும் பெருஞ்சிறப்புச் சேர்க்கும் வகையில் உலகப் பல்கலைக்கழகங்களில் திருவள்ளுவர், தொல்காப்பியர், இளங்கோவடிகள் பெயரில் தமிழ்மொழிக்கான 3 இருக்கைகள் நிறுவ தமிழ்பேராயம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
விழாவில் கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு பரிதிமாற்கலைஞர் விருதுடன் ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசும், கொலைச் சேவல் நூல் எழுதிய எழுத்தாளர் இமயத்துக்கு புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதுடன் ரூ1.5 லட்சம் பரிசும், மலர் மகன் கவிதைகள் நூல் எழுதிய மலர்மகனுக்கு பாரதியார் கவிதை விருதுடன் ரூ1.5 லட்சம் பரிசும், சொட்டுத் தண்ணீர் நூல் எழுதிய ஓ.கே.குணநாதனுக்கு அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருதுடன் ரூ1.5 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது.
பத்துப் பாட்டு தமிழ் இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஏ.தட்சிணாமூர்த்திக்கு ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருதுடன் ரூ1.5 லட்சம் பரிசும், சர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது நூல் எழுதிய டாக்டர் கு.கணேசனுக்கு பெ.நா.அப்புசாமியின் அறிவியல்தமிழ் விருதுடன் ரூ1.5 லட்சம் பரிசும், சோழர் கால ஆடற்கலை நூல் எழுதிய டாக்டர் இரா.கலைக்கோவனுக்கு ஆனந்த குமாரசாமி கவின்கலை விருதுடன் ரூ.1.5 லட்சம் பரிசும் வழங்கப்பட்டன.
குறுந்தொகை நூல் எழுதிய வ.ஐ.ச. ஜெயபாலனுக்கு விபுலானந்தர் படைப்பிலக்கிய விருதுடன்,ரூ1.5 லட்சம் பரிசும், தமிழகத்தில் புரத வண்ணார்கள் நூல் எழுதிய த.தனஞ்செயனுக்கு அப்துல் கலாம் இளம் தமிழ் ஆய்வாளர் விருதுடன் ரூ1.5 லட்சம் பரிசும் வழங்கப்பட்டன.
காலச்சுவடு நூல் எழுதிய எஸ்.ஆர்.சுந்தரத்துக்கு சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருதுடன் ரூ1 லட்சம் பரிசும், தொல்காப்பிய விருது பெறும் இலக்கியவீதி இனியவன், வி.சு.துரைராஜா ஆகியோருக்கு தலா ரூ50 ஆயிரமும், கனடா தமிழ்ச் சங்கக் கல்லூரிக்கு ரூ1 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டன.
விழாவில் தமிழ்ப்பேராயம் தலைவர் டி.பி.கணேசன், முன்னாள் தலைவர் எம்.பொன்னவைக்கோ, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்
கழகத் துணை வேந்தர்
வி.எம்.முத்துகுமார், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், தமிழ்ப்பேராயம் செயலர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT