தமிழ்நாடு

நாகை மீனவர்களின் வலைகளை பறித்துச் சென்ற இலங்கை மீனவர்கள்

DIN

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களின் வலைகளை அறுத்து விட்டு, மீன்பிடி வலைகளையும், மீன்களையும் இலங்கை மீனவர்கள் எடுத்துச் சென்றனர்.
நாகை அருகேயுள்ள நாகூர் கீழப்பட்டினச்சேரி, ஆரிய நாட்டு நடுத் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தன் (40). இவருக்குச் சொந்தமான விசைப்படகில், இவருடன் கோவிந்தன் (41), கிருஷ்ணன் (28), ரவி (42), வையாபுரி (50), அழகேந்திரன் (46), முத்துக்குமரன் (42), தங்கமுருகன் (27) ஆகிய 8 பேரும், நாகை துறைமுகத்திலிருந்து கடந்த 11ஆம் தேதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி இரவு வேளாங்கண்ணியிலிருந்து 35 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கடலில் வலை விரிக்கப்பட்டு, மீதமுள்ள பகுதி படகிலும் கட்டப்பட்டிருந்தது. இரவு நேரம் என்பதால், மீனவர்கள் சற்றே ஓய்வில் இருந்தனராம்.
அப்போது, அங்கு 2 விசைப் படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள், கடலில் இருந்த வலைகளை மீன்களோடு சேர்த்து அறுத்து எடுத்துச் சென்று விட்டனராம். இலங்கை மீனவர்கள் அறுத்துச் சென்ற வலையின் மதிப்பு ரூ. 11 லட்சம் எனவும், அதிலிருந்த மீனின் மதிப்பு ரூ. 2 லட்சம் எனவும் மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து நாகை துறைமுகத்துக்கு திங்கள்கிழமை காலை வந்த மீனவர்கள், இந்த சம்பவம் குறித்து மீன்வளத் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு சம்பவம்: இதேபோல், நாகை அக்கரைப்பேட்டை, டாடா நகரைச் சேர்ந்த கதிர்வேல் மகன் வேல்முருகன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், கடந்த 15 ஆம் தேதி நாகை துறைமுகத்திலிருந்து சங்கர் (39), விஜேந்திரன் (26), விக்கி (22), பாலமுருகன் (24), விக்னேஷ் (23), பழனி (28), முத்து (27), தயாளன் (48), லோகநாதன் (38), செல்வகுமார் (25) உள்ளிட்ட 10 பேரும் மீன்பிடிக்க புறப்பட்டனர். கடந்த 18ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு 33 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்திய எல்லைக்குள்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 2 பெரிய விசை படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள், ரூ. 8 லட்சம் மதிப்புள்ள வலைகளை அறுத்து எடுத்துக் கொண்டு சென்று விட்டனர். நாகை மீனவர்கள் அவர்களை துரத்திச் சென்றும் பிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, நாகை துறைமுகத்துக்கு திங்கள்கிழமை மாலை வந்த மீனவர்கள், மீன்வளத் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT