தமிழ்நாடு

கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா

DIN

கலை என்பதே சங்கமம்தான் என இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.
மத்திய வருமான வரித் துறையின் விளையாட்டு, கலாசாரம் தென் மண்டல வாரியம் சார்பில், 30-ஆவது அகில இந்திய கலாசாரப் போட்டி "கலா சங்கமம்' எனும் பெயரில் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
நாடு முழுவதிலும் பங்கேற்றுள்ள வருமான, சுங்கம், கலால் வரித் துறைகளின் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு மன்டல, மாநில அளவில் இசை, நடனம், நாடகம் உள்பட 13 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இந்தப் போட்டியைத் தொடக்கிவைத்து இளையராஜா பேசியதாவது:-
உலக தாய்மொழி தினம் பிப்ரவரி 21-இல் கொண்டாடப்படுகிறது. தாய் மொழி என்பது ஒரு கலாசாரம். கலை என்பதே சங்கமம்தான். பல ஸ்வரங்கள் சங்கமிக்கும் போதுதான் கலை உருவாகிறது என்றார்.
விழாவில் பத்மா சுப்ரமணியம் பேசியதாவது: கலை, மனித நல்லிணக்கத்தைப் பேணுகிறது. உலகில் கலைகள் மூலம்தான் நல்லிணக்கத்தைப் பேண முடியும். கலையில் இசை, நாடகம், நடனம், நாட்டியம் போன்றவை ஒர் அங்கம். கலைஞர்கள் பூலோக அமைப்புக்கும், அரசியலுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்றார்.
நிகழ்ச்சியில் வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையர் ஏ.கே.ஸ்ரீவத்சவா, சென்னை சுங்க வரித் துறை தலைமை ஆணையர் பிரணாப் குமார் தாஸ், சென்னை வருமான வரித் துறை ஆணையர்கள் ஜே.ஆல்பர்ட், வி.பழனிவேல் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாடிய இளையராஜா: நிகழ்ச்சியில் கலந்து கொண்டோரின் வேண்டுகோளை ஏற்று, தாய் மூகாம்பிகை எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற "ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ' என்ற பாடலை இளையராஜா பாடினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரியில் வெடி விபத்து: உரிமையாளர் காவல்நிலையத்தில் சரண்

கடன் தொல்லையால் வணிகர் தற்கொலை!

நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் பரிசளித்த ஷாலினி!

டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி!

சல்மான் கான் வீடருகே துப்பாக்கிச் சூடு: குற்றவாளி தற்கொலை முயற்சி

SCROLL FOR NEXT