தமிழ்நாடு

அம்மா திட்டங்களின் பெயரை மாற்ற வேண்டும்: ராமதாஸ்

DIN

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் அம்மா திட்டங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
அதிமுக கட்சி நிகழ்வுகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தகைய மரியாதையை வேண்டுமானாலும் செலுத்தலாம். அது அவர்களின் உரிமை. ஆனால், முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் அவரின் படத்தை வைப்பதும், மரியாதை செய்வதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. மேலும் ஜெயலலிதாவின் பெயரில் செயல்படுத்தப்படும் அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா விதைகள், அம்மா சிமெண்ட் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு அரசின் பெயரில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT