தமிழ்நாடு

நீட் தேர்வு விலக்கு மசோதா: பிரதமர் மோடிக்கு டி.கே.ரங்கராஜன் கடிதம்

DIN

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பிரதமர் நரேந்திர மோடி விரைந்து பெற்றுத் தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமருக்கு புதன்கிழமை அவர் எழுதிய கடிதம்: எம்.பி.பி.எஸ். படிப்புக்கும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிராமப்புற மற்றும் ஏழை, எளிய மாணவர்களால் அதிகக் கட்டணம் செலுத்தி நீட் பயிற்சி மையங்களில் படிக்க இயலாது. இதனால் மருத்துவப் படிப்பு அவர்களுக்கு கனவாக மாறிவிடும்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்ணின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது. அந்த மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் குறிப்பிட்ட சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதனால் அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் மாணவர்கள் பயனடைந்து வந்தனர்.
மேலும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிப்புக்கான கட்டணத்தை அந்தந்த மாநில அரசுகளே ஏற்றுக் கொள்கிறது.
இதனால் மிகக் குறைந்த கட்டணத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் நீட் தேர்வைப் புகுத்தி மாநில அரசுகளின் உரிமையைப் பறிப்பது, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானதாகும்.
தாய்மொழிகளில் மட்டுமே உரையாடக்கூடிய ஏழை மக்கள் சிகிச்சைக்கு பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.
அப்போது வேறு மாநிலத்தைச் மருத்துவ மாணவர்களால் நோயாளிகளிடம் சகஜமாக உரையாட முடியாது.
இதனால் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில அரசுகளின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
எனவே, நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT