தமிழ்நாடு

காஞ்சிபுரம் ரெளடியின் ரூ. 160 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

DIN

சர்வதேச குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ரெளடிஸ்ரீதரின் ரூ. 160 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வியாழக்கிழமை முடக்கம் செய்தனர்.
காஞ்சிபுரத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கள்ளச் சாராய வியாபாரியாக இருந்து, கட்டப் பஞ்சாயத்து, கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர் ஸ்ரீதர். கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீதர், வெளிநாட்டில் இருந்து கொண்டு அவரது ஆள்கள் மூலம் கட்டப் பஞ்சாயத்து, கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவற்றை காவல் துறையினரும் அவ்வப்போது தடுத்து வந்தனர்.
இந்த நிலையில் ஸ்ரீதரை, காஞ்சிபுரம் நீதிமன்றம் அண்மையில் சர்வதேச குற்றவாளியாக அறிவித்திருந்தது.
இதையடுத்து முறைகேடான வழிகளில் ஸ்ரீதர் சேர்த்த சொத்துகளின் பட்டியலை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கணக்கீடு செய்தனர். அந்தச் சொத்துகளை சென்னை அமலாக்கப் பிரிவு இணை இயக்குநர் ஆனந்தி தலைமையிலானக் குழுவினர் கைப்பற்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே எல்லப்பா நகரில் உள்ள ஸ்ரீதரின் வீட்டையும், திருப்பருத்திகுன்றம் ஊராட்சியில் உள்ள அவரது சகோதரர் செந்திலின் வீட்டையும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வியாழக்கிழமை முடக்கம் செய்தனர்.
இதையடுத்து வீட்டில் உள்ளவர்களை 10 நாள்களுக்குள் வெளியேற வேண்டும் எனக் கூறி நோட்டீஸ் ஒட்டினர்.
இதுகுறித்து ஏடிஎஸ்பி ஸ்ரீநாத் கூறியதாவது:
நீதிமன்ற உத்தரவின்படி அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், காவல் துறை உதவியுடன் ஸ்ரீதருக்குச் சொந்தமான சுமார் ரூ. 160 கோடி (அரசாங்க மதிப்பீடு) மதிப்புள்ள சொத்துகளை முடக்கும் பணியை செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்

ஒசூரில் கடும் குடிநீா் தட்டுப்பாட்டு: நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்

பணம் பறித்த இருவரை அடைத்து வைத்து கொலை மிரட்டல்: இருவா் கைது

தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT