தமிழ்நாடு

பன்றிக் காய்ச்சல்: கோவையில் 36 பேர் சிகிச்சை

DIN

பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்காக, கோவை அரசு மருத்துவமனையில் 36 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் மொத்தம் 20-க்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மேலும், கடந்த ஒரு வாரமாக பன்றிக் காய்ச்சலால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்காக புதன்கிழமை 37 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஆயினும், வியாழக்கிழமை நிலவரப்படி, பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்காக 36 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், நுரையீரல் பிரச்னை, சிறுநீரகக் கோளாறு, இதயக் கோளாறு வேறு உடல்நிலை பாதிப்புகள் உள்ளனவா என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தவிர, டெங்கு காய்ச்சலுக்காக 3 பேர், சாதாரண காய்ச்சலுக்காக 56 பேர் என காய்ச்சலுக்காக மொத்தம் 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT