தமிழ்நாடு

புதுவையில் மேலும் 4 பேருக்கு பன்றிக் காய்ச்சல்

DIN

புதுவையில் மேலும் 4 பேர் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம், புதுவையில் பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில், புதுவையில் புதன்கிழமை வரை 86 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில், 6 பேர் உயிரிழந்த நிலையில், 60-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று குணமாகியுள்ளனர்.
தற்போது ராஜீவ்காந்தி பெண்கள் - குழந்தைகள் மருத்துவமனையில் ஒரு குழந்தையும், ஜிப்மர் மருத்துவமனையில் 2 பேரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் லாஸ்பேட்டை, மேட்டுப்பாளையம், ரெட்டியார்பாளையம், புதுச்சேரி ஆருத்ரா நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT