தமிழ்நாடு

அதிமுகவில் எந்தப் பதவிக்கும் வர மாட்டேன்: சசிகலாவின் கணவர் நடராஜன் பேச்சு! 

அதிமுகவில் எந்தப் பதவிக்கும் நான் வர மாட்டேன் என்று தஞ்சையில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்தார்.

DIN

தஞ்சாவூர்: அதிமுகவில் எந்தப் பதவிக்கும் நான் வர மாட்டேன் என்று தஞ்சையில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்தார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்படுகிறது. அந்த வரிசையில் தஞ்சாவூரில் நடைபெறும் விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர் தெரிவித்ததாவது:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் இருக்கும்வரை அதிமுகவை யாராலும் எதுவும் செய்ய முடியாது. பலரும் கூறுவது போல நான் அதிமுகவில் எந்தப் பதவிக்கும் வர மாட்டேன். ஆனால் பதவிக்கு வராமலேயே அதிமுக என்னும் இயக்கத்தை பாதுகாப்பேன்.

திமுகவின் செயல் தலைவராக இருக்கின்ற ஸ்டாலின் இப்போது செயல்படாத தலைவராக ஆகி விட்டார்.

இவ்வாறு நடராசன் பேசினார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது! - இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு!

”அவர் உருவாக்கிய யாரும் வீண்போகவில்லை!” நல்லகண்ணு குறித்து முத்தரசன்!

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு : மோடி

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26

SCROLL FOR NEXT