தமிழ்நாடு

உயிரிழந்த 20 காவலர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி

DIN

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 20 காவலர்கள், தீயணைப்பு வீரர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் பொது நிவாரண நிதி பெறும் காவலர்களின் விவரம்:
சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை 1 -ஆவது அணியில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த பி.முனியாண்டி, புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் காவல் நிலைய தலைமைக் காவலர் எஸ்.சந்தானகிருஷ்ணன், சிவகங்கை மாவட்டம் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை தலைமைக் காவலர் கே.ரவீந்திரன்.
தேனி மாவட்டம் வீரபாண்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலர் எம்.பிரேம்குமார், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தமிழ்நாடு சிறப்புக் காவல் 7 -ஆவது அணியில் இரண்டாம் நிலை காவலராகப் பணியாற்றிய டி.குமரவேல், திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி காவல் நிலைய தலைமைக் காவலர் எஸ்.சுந்தர்ராஜ்.
திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஏ.ஜான்சன் ஞானையா, வேலூர் மாவட்டம் தக்கோலம் காவல் நிலைய தலைமைக் காவலர் ஜி.கனகராஜ், திருச்சி மாவட்டம் தில்லை நகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஏ.பழனியாண்டி, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தீயணைப்பு மீட்புப் பணி நிலைய தீயணைப்பாளர் ஏ.பருக்துல்லா, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவியாளர் ஆர்.ராஜேந்திரன்.
சென்னை ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் பி.வெங்கடேசன், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் காவல் நிலைய சிறப்பு உதவியாளர் எஸ்.சதீசன், விழுப்புரம் மாவட்டம் வளவனூர் காவல் நிலைய காவலர் எஸ்.கணேசன், திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை இசைக் காவலர் பாலகிருஷ்ணன், சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வி.சந்திரபாபு, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பொன்னுதாஸ், தூத்துக்குடி மாவட்டம் மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் 9 -ஆவது அணியில் அவில்தார் இ.சின்னப்பராஜ், சிவகங்கை மாவட்டம் தாலுகா காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் எம்.காசி ஆகியோர் உயிரிழந்த செய்தி கேட்டு நான் மிகவும் துயரமடைந்தேன்.
பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த மேற்கண்ட 20 காவலர்கள், தீயணைப்பாளர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT