தமிழ்நாடு

புத்தகங்களை பரிசாக வழங்குங்கள்: திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

DIN

மார்ச் 1-இல் பிறந்த நாள் கொண்டாடும் திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், "பொன்னாடைகளைப் பரிசாக வழங்குவதற்குப் பதிலாக புத்தகங்களை வழங்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கான கடித வடிவில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சிக்கு எதிரான மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் போராட்டங்களைத் திமுக நடத்தி வருகிறது. திமுக ஆட்சி அமையும் வரையில் இந்தப் போராட்டம் தொடரும்.
இந்த வெற்றித் திருநாள் வெகுதொலைவில் இல்லை. இந்தச் சூழலில் எனது (ஸ்டாலின்) பிறந்தநாள் வாழ்த்துச் செய்திகளை தொண்டர்கள் முன்கூட்டியே தெரிவித்து வருகின்றனர். இளைஞர் எழுச்சி நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளையும் ஆர்வத்துடன் மேற்கொண்டுள்ளனர்.
அன்பின் மிகுதியால், பிறந்த நாளன்று நேரில் வாழ்த்து தெரிவிக்கும் கட்சியினர் பொன்னாடை என்ற பெயரில் செயற்கை இழையிலான பளபளப்பு சால்வைகளைப் போர்த்துவது வழக்கமாகிவிட்டது. பகட்டான இந்தப் பழக்கத்தைத் தவிர்த்து, காலமெல்லாம் பயனுள்ள வகையில் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கும் பழக்கத்தை மீண்டும் புதுப்பித்துப் பின்பற்றவேண்டும். தமிழகத்தின் வரலாற்றுப் பெருமையையும் உலகளாவிய நிலைமைகளையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள புத்தகங்கள் துணை நிற்கின்றன. எனவே, சால்வை அணிவிக்காமல், புத்தகங்களை அளிக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT