தமிழ்நாடு

குடியரசுத் தலைவருடன் ஓபிஎஸ் அணியினர் இன்று சந்திப்பு

DIN

சட்டப்பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பு தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் செவ்வாய்க்கிழமை (பிப். 28) நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசியமாக நடைபெற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வந்தார்.
ஆனால், அதைப் பேரவைத் தலைவர் தனபால் ஏற்கவில்லை. எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 122 வாக்குகள் பெற்று, எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றார்.
இந்த நிலையில், வாக்கெடுப்பு சரியான முறையில் நடைபெறவில்லை என ஓ.பன்னீர்செல்வம் அணியினர், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள 12 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடன் செல்ல உள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்கவும் மனுவில் அவர்கள் வலியுறுத்த உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT