தமிழ்நாடு

மொழி சிறுபான்மை பள்ளிகளில் பயில்வோருக்கு தமிழ் பாடத் தேர்வில் இருந்து விலக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

DIN

மொழி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வின்போது தமிழ் பாடத் தேர்வை எழுதுவதில் இருந்து விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை தமிழக அரசு 2006-ஆம் ஆண்டு ஜூன் 12-இல் கொண்டு வந்ததால், அனைத்து வகையான பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் கட்டாயமாக்கப்பட்டது.
தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட பிற மொழிகளிலும் பயிலும் மாணவர்களும் பொதுத் தேர்வுகளின்போது, தமிழ் பாடத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டிய சூழல் உருவாகியது.
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 2015-16ஆம் கல்வியாண்டில் பிற மொழி மாணவர்கள் தமிழ் பாடத் தேர்வு எழுத விலக்களித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டிலும் விலக்கு அளிக்கக் கோரி, மொழி சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:-
மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்வில் மொழிப்பாட பிரிவில், தமிழுக்குப் பதிலாக பிற மொழியில் தேர்வெழுத விண்ணப்பித்த அனைத்து மாணவர்களையும், கடந்த ஆண்டை போன்று நிகழாண்டும் அவரவர் தாய்மொழி பாடத் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும். கடந்தாண்டு பிறப்பித்த உத்தரவுகளை பள்ளிக்கல்வித் துறை பின்பற்ற வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மம்தாவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மயங்கி விழுந்த நபரால் பரபரப்பு

மாலிவாலை இழிவுபடுத்தவே திருத்தப்பட்ட விடியோக்களை ஆம் ஆத்மி பரப்பி வருகிறது: பாஜக

அயலக தமிழர்கள் பதிவு- தமிழக அரசு அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

SCROLL FOR NEXT