தமிழ்நாடு

அடுத்த 40 ஆண்டுகளை எதிர்கொள்ள காவலர்களுக்கு நவீன பயிற்சி : ஆளுநர் கிரண்பேடி

தினமணி

அடுத்த 40 ஆண்டுகளை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சிக் காவலர்களுக்கு நவீன முறையில் பயிற்சி தரப்பட்டுள்ளது என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

கோரிமேடு காவலர் பயிற்சிப் பள்ளயில் இன்று நடந்த பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது:
நாட்டிலேயே அதிக பெண் காவலர்கள் பயிற்சி பெற்ற மையமாக இது திகழ்கிறது. காவலர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற்றனர். முதன்முறையாக புதுச்சேரி பயிற்சிக் காவலர்கள் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பாரத் தரிசனம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

எதிர்கால தலைமுறையை கருத்தில் கொண்டு காவலர்களுக்கு பயிற்சி தரப்பட்டது.

நவீன தொழில்நுட்பங்கள், சமூக வலைதளங்கள் தொடர்பாகவும், கணினி பயிற்சியும் தரப்பட்டது. தங்கள் பொறுப்பை உணரும் வகையில் சிரம தான பணிகளும் மேற்கொண்டனர்.

முதன்முறைாக பெண் காவலர்கள் பீட் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு செயல்பட்டனர். இரவு ரோந்து பணிப்பயிற்சியும் பெற்றனர். அடுத்த 40 ஆண்டுகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற அளவில் அவர்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. எந்த முறைகேடும் இல்லாமல் காவலர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் முறையாக காவல்துறையில் இணைந்து பணிபுரிய உள்ளனர்.

பயிற்சிக் காவலர்களுக்கு சிறந்த பயிற்சியை ஏற்பாடு செய்த டிஜிபிக்கு பாராட்டுகள் என்றார் கிரண்பேடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT