முகப்பு
தமிழ்நாடு

அதிமுக அமைதி ஊர்வலத்தில் பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய அமைதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 10:41 AM
பகிர்:


திருவண்ணாமலை: திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய அமைதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக திருவண்ணாமலை காமராஜர் சிலை எதிரில் இருந்து ஊர்வலமாக புறப்படத் தயாராக இருந்தனர்.

இது பற்றி செய்தி சேகரிக்க, அங்கு ஏராளமான பத்திரகையாளர்கள், நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள் குவிந்திருந்தனர்.

அப்போது அதிமுக பிரமுகர்கள் சிலர் பத்திரிகையாளர்களை தரக்குறைவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால், பேரணி புறப்பாடு சிறிது தாமதம் ஏற்பட்டது.

தட்டிக் கேட்ட பத்திரிகையாளர்களை அதிமுகவினர் அடிக்கப் பாய்ந்தனர். செய்தி சேகரிக்க நீங்கள் அழைப்பு விடுத்ததால்தான் நாங்கள் இங்கே வந்தோம். இப்போது தரக் குறைவாகப் பேசுகிறீர்களே என்று பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நீங்கள் பத்திரிகையாளர்களாக இல்லாவிட்டால் உங்களை இங்கேயே கொன்று புதைப்போம் என்று கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதையடுத்து பத்திரிகையாளர்கள் அனைவரும் நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு சென்று விட்டனர். இது குறித்து காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.