தமிழ்நாடு

அரசியலில் இருந்து விலகும் முடிவை மாற்றிக் கொண்டார் நாஞ்சில் சம்பத்: காரணம் குறித்து விளக்கம்

அதிமுக பொதுச் செயலர் சசிகலா கேட்டுக் கொண்டதால் அரசியலில் இருந்து விலகும் முடிவை மாற்றிக் கொண்டதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

DIN


சென்னை: அதிமுக பொதுச் செயலர் சசிகலா கேட்டுக் கொண்டதால் அரசியலில் இருந்து விலகும் முடிவை மாற்றிக் கொண்டதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

பொது வாழ்வில் இருந்து விலகும் முடிவை எடுத்திருந்த நாஞ்சில் சம்பத், இன்று போயஸ் தோட்ட இல்லத்தில், அதிமுக பொதுச் செயலர் சசிகலாவை சந்தித்து பேசினார்.

பிறகு தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த நாஞ்சில் சம்பத், காரை திரும்ப அளித்தது குறித்து சசிகலா கேட்டார்.  பொது வாழ்வில் இருந்து விலகும் முடிவை திரும்பப் பெறுமாறு சசிகலா வலியுறுத்தினார் என்றார்.

தொடர்ந்து பேசிய நாஞ்சில் சம்பத், சசிகலா தலைமையில் சுதந்திரம் கிடைப்பதை உணர்கிறேன். எனது முடிவையும் மாற்றிக் கொண்டேன். அதிமுகவில் உள்ளாட்சித் தேர்தலுக்காக தொய்வின்றி தொடர்ந்து உழைப்பேன்.

சசிகலா ஆணைகளை நிறைவேற்ற தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். கட்சியில் புதிதாக பொறுப்பு எதுவும் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நாஞ்சில் சம்பத், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

இந்த நிலையில், அவர் திமுகவில் சேர்வார் என்று சில புரளிகளும் கிளம்பின. அதனை உறுதி செய்யும் வகையில், அவருக்கு ஜெயலலிதா அளித்த இன்னோவா காரை திருப்பி அளித்தார். ஆனால், அவர் வேறு எந்த கட்சியிலும் சேரப்போவதில்லை என்றும், பொது வாழ்வில் இருந்து ஒதுங்கியிருக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

மெட்ராஸ் ஐஐடி-ல் புராஜெக்ட் அசோசியேட் பணி

மோடியின் தாயார் ஏஐ விடியோ: உடனே நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT