தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை: சிறப்புப் பேருந்து முன்பதிவு மையங்களை திறந்து வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட 28 சிறப்பு முன் பதிவு மையங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார்.

DIN


சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட 28 சிறப்பு முன் பதிவு மையங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார்.

சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

11ம் தேதி 794 சிறப்புப் பேருந்துகளும், 12ம் தேதி 1,779 பேருந்துகளும், 13ம் தேதி 1,872 பேருந்துகளும் என மொத்தம் 4,445 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.  பிற மாவட்டங்களில் இருந்து மொத்தமாக இந்த மூன்று நாட்களும் 11,270 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கான முன்பதிவு மையங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார்.

தீபாவளிப் பண்டிகையைப் போன்றே, 11, 12, 13ம் தேதிகளில வெளியூர் செல்லும் நீண்ட தூர பேருந்துகள் அண்ணாநகர் (மேற்கு), தாம்பரம் சானிடோரியம், பூவிருந்தவல்லி, அடையாறு பேருந்து நிலையம், கோயம்பேடு ஆகிய, ஐந்து இடங்களில் இருந்து புறப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

பெரியார் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை!

SCROLL FOR NEXT