முகப்பு
தமிழ்நாடு

புலிகள் காப்பகத்தில் வறட்சி: தண்ணீர், இரைக்காக வெளியேறும் சிறுத்தை, யானைகள்!

வனப் பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக, உணவு, குடிநீரைத் தேடி அங்கிருந்து வெளியேறி வனப் பகுதியையொட்டியுள்ள

Updated On : 29 ஜனவரி, 2024 at 10:43 AM
பகிர்:

திருநெல்வேலி: வனப் பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக, உணவு, குடிநீரைத் தேடி அங்கிருந்து வெளியேறி வனப் பகுதியையொட்டியுள்ள கிராமங்களுக்குள் சிறுத்தை, யானைகள் புகுவது தொடர்கதையாகி வருகிறது. இதனால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கடையத்தில் இருந்து திருக்குறுங்குடி வரை களக்காடு- முண்டன்துறை புலிகள் காப்பகம் 895 சதுர மீட்டர்
பரப்பளவில் அமைந்துள்ளது. இக்காப்பகத்தில் மலையடிவாரத்தில் 162 கிராமங்கள் உள்ளன.
வனங்கள், வன விலங்குகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில், சூழல் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மலையடிவாரங்களில் வசிக்கும் கிராம மக்களுக்கு சிறுதொழில் செய்ய வனத் துறை சார்பில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதனால், கிராம மக்கள் வனப் பகுதிக்கு சென்று விறகு வெட்டுவது குறைந்துள்ளது. மேலும், மலையடிவாரக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் மாற்றுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, மலையடிவாரக் கிராமங்களில் புகுந்து சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி போன்றவை அட்டகாசம் செய்து வருவதால் விளைபொருள்கள் சேதமடைந்து வருவதாக கிராம மக்கள், விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
காரணம் என்ன?
வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால் மலையில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்து நீர்வரத்து வெகுவாக குறைந்து வனப் பகுதியில் வறட்சியான சூழல் நிலவுகிறது.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழைப் பொழிவு இல்லாததால் மலைப்பகுதியில் நீர்நிலைகள், சிறிய அருவிகளில் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டுள்ளது. இதனால் விலங்குகள் தண்ணீருக்காக வனப் பகுதியில் இருந்து வெளியேறி வருவதாகக் கூறப்படுகிறது.
யானைகள் மணிமுத்தாறு அருவி, தலையணைப் பகுதி வழியாக வெளியேறி, பிரதான கால்வாயை அடுத்து கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள பொட்டல், தெற்கு பாப்பான்குளம் பகுதியில் நடமாடுகின்றன.
இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குமார் கூறியதாவது: கோடைக் காலங்களில் கல்லிடைக்குறிச்சி அருகே மலையடிவாரத்தில் காட்டுயானைகள் நடமாட்டம் இருக்கும். தற்போது மழை இல்லாததால் பொட்டல் அருகேயுள்ள சீரான்குளத்தில் தண்ணீர் குடிப்பதற்காக 6 யானைகள் கூட்டமாக வருகின்றன. ஒரு யானை தனியாக நடமாடுவதையும் கிராம மக்கள் பார்த்துள்ளனர்.
அவ்வாறு வரும் யானைகள் தென்னை, பனைமரங்களை முறித்தும், விளைநிலங்களை அழித்தும் சேதப்படுத்தி வருகின்றன. யானைகள் நடமாட்டம் மிக அருகில் இருப்பதால் பொட்டல், மூலச்சி, உலுப்படிபாறை, மலையான்குளம், அழகப்பபுரம் போன்ற கிராமங்களில் வசிக்கும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது என்றார் அவர்.
இதேபோல், கடையம் அருகே மலையடிவாரத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிலுள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் கடந்த சில மாதங்களாக சிறுத்தைகள் புகுந்து  கால்நடைகளை கடித்துக் கொன்று வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →