தமிழ்நாடு

ஜல்லிக்கட்டை நடத்தியது மகிழ்ச்சி

DIN

தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சட்டப் பேரவையில் திங்கள்கிழமை அவர் ஆற்றிய உரை:
ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு உள்ள சட்டரீதியான தடைகளை நீக்குவதற்கு தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி வரலாறு காணாத வகையில் லட்சக்கணக்கான இளைஞர்களும், அவர்களுக்கு ஆதரவாகத் திரண்ட பொது மக்களும் தன்னெழுச்சியுடன் அமைதியான முறையிலும், முழு கட்டுப்பாட்டுடனும் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
இதன் விளைவாக ஜல்லிக்கட்டை நடத்துவதற்கும், தமிழர்களின் கலாசார அடையாளங்களைப் பாதுகாப்பதற்கும், உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களிடையே பேராதரவு ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் தமிழகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்படுத்தும் வகையில், குறிப்பிட்ட பிரிவுகளில் அவசரச் சட்டத்தின் மூலம் மாநில அரசு சில சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு வழிவகை செய்துள்ளது.
இந்த முயற்சிகளில் வெற்றி கண்டு ஜல்லிக்கட்டை நடத்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வாக, இந்த அவரசச் சட்டத்தை மாற்றீடு செய்ய, முறையான சட்ட முன்வடிவு உடனடியாகக் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT