தமிழ்நாடு

ஜல்லிக்கட்டுத் தொடர்பாக அவதூறு:  சூர்யாவிடம் மன்னிப்புக் கேட்டது பீட்டா!

DIN

சென்னை: ஜல்லிக்கட்டு க்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சூர்யா மீது அவதூறு கூறிய பீட்டா அமைப்பு தற்பொழுது அவரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரிமாநிலம் முழவதும் இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.அந்த வரிசையில்

நடிகர் சூர்யா பேசும் பொழுது , "ஜல்லிக்கட்டு நமது கலாச்சார அடையாளமான ஒரு விஷயம். ஜல்லிக்கட்டை தடை செய்யக் கூடாது" என்று கூறியிருந்தார்.

சூர்யாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த  பீட்டா உறுப்பினர் நிகுன்ஜ் சர்மா, "ஜல்லிக்கட்டு பிரச்சினையை பயன்படுத்தி சூர்யா வெளிவரவிருக்கும் தனது சி-3 திரைப்படத்துக்கான விளம்பரம் தேடுகிறார்" என்று விமர்சித்திருந்தார்.

இதனை கண்டு கோபமான சூர்யா பீட்டா அமைப்பு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பின்னர்.

இந்நிலையில் பீட்டா அமைப்பின் நிர்வாக தலைவர் பூர்வா ஜோஷி பூரா சூர்யாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "உங்களது ஜல்லிக்கட்டு ஆதரவுக் கருத்துகளை உங்கள் அடுத்த திரைப்படம் ’சிங்கம் 3’ பட வெளியீட்டுடன் தொடர்பு படுத்தி பேசியதற்கு நாங்கள் முழு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT