தமிழ்நாடு

அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்ய தடை நீடிக்கும்

DIN

அங்கீகாரமில்லா வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால் அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளை பத்திரப் பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை தொடருகிறது.
சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உரிய அனுமதியின்றி விளை நிலங்கள் அனைத்தும் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக மாற்றியுள்ளனர். எனவே, வரம்பின்றி விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதற்கு தடை விதிக்க வேண்டும் என, வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு, விளை நிலங்களை வீட்டு மனைகளாக "லே-அவுட்' போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது அந்த நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டடத்தையோ பத்திரப்பதிவுத்துறையினர் எந்தவித காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது என, கடந்தாண்டு செப்.9-இல் தடை விதித்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஆர்.முத்துகுமாரசாமி, அங்கீகாரமற்ற மனைகளை அரசு எவ்வாறு வரையறை செய்யப்போகிறது என்பது குறித்த திட்டம் பற்றி அறிக்கையை இறுதி செய்து தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் சிலர், அங்கீகாரமில்லா மனையில் ஏற்கெனவே கட்டடப்பட்ட கட்டடங்களுக்கு மட்டுமாவது விதிக்கப்பட்ட தடையை தளர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஒரு சில கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழக அரசு சார்பில் கோரப்பட்ட கூடுதல் கால அவகாசத்தை வழங்கி, விசாரணையை வரும் பிப்.27-க்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT