திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை தமிழக அரசு ரத்து செய்யக்கோரி தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்திய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், 
தமிழ்நாடு

கேளிக்கை வரி: முதல்வருடன் திரைத் துறையினர் சந்திப்பு: நல்ல முடிவு கிடைக்கும் என விஷால் நம்பிக்கை

கேளிக்கை வரி ரத்து குறித்த தங்களின் கோரிக்கைக்கு நல்ல முடிவு கிடைக்கும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்தார்.

DIN

கேளிக்கை வரி ரத்து குறித்த தங்களின் கோரிக்கைக்கு நல்ல முடிவு கிடைக்கும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்தார்.

தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி, தமிழகம் முழுவதும் 1,200 திரையரங்குகள் திங்கள்கிழமை மூடப்பட்டன.

கோரிக்கை நிறைவேறும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தலைமையிலான தமிழ் திரை அமைப்புகளின் நிர்வாகிகள், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் மாநில அமைச்சர்களை இதுதொடர்பாக திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் விஷால் கூறியது:

கேளிக்கை வரிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் திரையரங்க உரிமையாளர்களின் போராட்டம் குறித்து முதல்வரிடம் பேசினோம். அவர்களிடம் எங்களது கோரிக்கையை வைத்தோம். அமைச்சர்களையும் சந்தித்துப் பேசினோம்.
மற்ற மாநிலங்களில் உள்ளது போல் தமிழகத்திலும் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என அவர்களிடம் கோரிக்கை வைத்தோம். எங்களது கோரிக்கையை அவர்கள் கேட்டுள்ளனர்.
 

முதல்வருடன் இன்று மீண்டும் சந்திப்பு: எங்கள் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமையும் (ஜூலை 4) முதல்வரைச் சந்தித்து பேச உள்ளோம். பேச்சுவார்த்தைக்குப் பின் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

SCROLL FOR NEXT