தமிழ்நாடு

ஜிஎஸ்டி பெயரில் கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: நிதியமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

தினமணி

ஜிஎஸ்டி பெயரில் கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். 

இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஜிஎஸ்டி என்ற பெயரில் கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுதொடர்பாக புகார் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் நலனை பாதிக்காத வகையில் தான் ஜிஎஸ்டி உள்ளது. ஜிஎஸ்டி.,யில் மாநில உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளது. 

திரையரங்கங்களுக்கான கேளிக்கை வரியை குறைப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும். கேளிக்கை வரி ரத்து செய்வது என்பது கொள்கை அளவில் முடிவெடுக்க வேண்டிய விஷயம். அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பது தான் எங்களின் தலையாய கடமை என நடராஜன் கூறியது வரவேற்கத்தக்கது இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT