தமிழ்நாடு

தமிழக விவசாயிகளை கட்டாயப்படுத்தி கடனை வசூலிப்பது கூடாது: வங்கிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழக விவசாயிகளை கட்டாயப்படுத்தி கடனை வசூலிக்கக் கூடாது என்றும், விவசாயப் பொருட்களை ஜப்தி செய்யக் கூடாது என்றும் உச் சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN


புது தில்லி: தமிழக விவசாயிகளை கட்டாயப்படுத்தி கடனை வசூலிக்கக் கூடாது என்றும், விவசாயப் பொருட்களை ஜப்தி செய்யக் கூடாது என்றும் உச் சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதையும்,  விவசாயிகளின் பிரச்னைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் கோரிய வழக்கில் வங்கிகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்றும், பயிர் காப்பீடு திட்டத்தை வர்த்தக நோக்கில் செயல்படுத்தக் கூடாது என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் அளித்துள்ள உச்ச நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 4ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

மேலும், தமிழக விவசாயிகளின் நலன் காக்க உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சங்கர நாராயணனின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டனவா என்பது குறித்தும், பரிந்துரைகளை நிறைவேற்ற எடுக்கப்பட்ட நடிவக்கைகள் என்ன என்பது குறித்தும் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவம்: தில்லி சிபிஜ அலுவலகத்தில் ஜன.19-ல் விஜய் ஆரராக சம்மன்!

ஜன நாயகன் தணிக்கைச் சான்று! பொங்கல் அன்று உச்சநீதிமன்றம் விசாரணை!

ஓய்வை அறிவித்தார் ஆஸி. கேப்டன் அலீசா ஹீலி.. 8 உலகக் கோப்பைகளை வென்றவர்!

பொங்கல்: சிறப்புப் பேருந்துகளில் 4.88 லட்சம் பேர் பயணம்

தில்லியில் இருந்து புறப்பட்டார் விஜய்!

SCROLL FOR NEXT