தமிழ்நாடு

இருசக்கர வாகனங்களில் செல்லிடப்பேசிக்கு சார்ஜ் செய்யும் கருவி அறிமுகம்

DIN

இருசக்கர வாகனங்களில் செல்லிடப்பேசிகளுக்கு சார்ஜ் செய்யும் 'பவர் எய்ட்' எனும் கருவியை இளம் சாதனையாளர் ஆமம் அருண் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
இரண்டு சக்கர வாகனங்களில் நீண்ட நேரம் பயணிப்பவர்களின் வசதிக்காக 'பவர் எய்ட்' எனும் செல்லிடப்பேசி சார்ஜ் கருவியை 8 மாத ஆராய்ச்சிக்கு பிறகு கண்டுபிடித்தேன். இருசக்கர வாகன இன்ஜினை இயக்குவதற்கு தூண்டுகோலாக (இக்னிஷின் ) உள்ள இடத்திலிருந்து வரும் ஆற்றலின் உதவியுடன்இக்கருவியைச் செயல்படுத்தலாம். வாகனத்தின் பேட்டரிக்கும் (எரிகலன்) இன்ஜினுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத வகையில், நேரடியாக இன்ஜினிலிருந்து வரும் ஆற்றலை கருவிக்கு மாற்றி அமைத்து சார்ஜ் செய்யும் முறை கையாளப்படுகிறது.
இந்த கருவியை வாகன கைப்பிடிக்கு அருகே கச்சிதமாகப் பொருத்திக் கொள்ளலாம். இக்கருவி மழை, வெயில், குளிர், தூசு போன்றவற்றால் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு செல்லிடப்பேசிகளுக்கு ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யலாம். மின்சாரம் இல்லாத நேரங்களிலும், அதிக நேரம் வாகனங்களில் பயணிக்கும் வர்த்தக பிரதிநிதிகளுக்கு இக்கருவி வரப்பிரசாதமாக இருக்கும். இக்கருவிக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. இதனை வர்த்தக படுத்தும் முனைப்பில் உள்ளோம். மேலும், இந்தக் கருவியை மூன்று சக்கர ஆட்டோவிலும் பொருத்திக் கொள்ளலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT