தமிழ்நாடு

நாடாளுமன்றத்தில் தமிழக பிரச்னைகளுக்கு முன்னுரிமை

DIN

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் தமிழகப் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தமிழக எம்.பி.க்கள் பேச வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்கும் தமிழக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தமிழகத்தின் பிரச்னைகள், வளர்ச்சி ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து குரல் கொடுக்க வேண்டும். குறிப்பாக, விவசாயிகள் தேசிய வங்கிகளில் பெற்ற கடன் தள்ளுபடி, நிரந்தர ஆளுநர் நியமனம், மகளிருக்கான 33 சதவீத இட இதுக்கீடு, மீனவர் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு உள்ளிட்டவற்றுக்கு அதிக அழுத்தம் கொடுத்துப் பேச வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் ஆகிய திட்டங்களைத் தமிழகத்தில் திணிக்காமல் இருப்பதற்கு, நாட்டின் எல்லையோரப் பகுதியில் தீவிரவாதம், பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகியவற்றை முறியடித்து, குற்றங்களைத் தடுக்க காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.
அதே சமயம், பாஜக மத்தியில் ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக வெளிநாட்டு வங்கிகளில் பணம் சேமித்து வைத்திருப்போர் பட்டியல், கருப்புப் பணம் மீட்பு ஆகியவற்றில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT