தமிழ்நாடு

ஜிப்மரில் செவிலியர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்

DIN

எய்ம்ஸ் மருத்துவமனை போல, ஜிப்மரிலும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி, புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை செவிலியர்கள் நலச் சங்கம் சார்பில் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகளுக்கு தரமான இலவச சிகிச்சை அளிக்கும் ஓரே மத்திய அரசு மருத்துவமனையாக ஜிப்மர் உள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறை பிரச்னை நிலவுகிறது.
இதனால் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜிப்மர் மருத்துவமனையில் தற்போது 2300 படுக்கை வசதி உள்ளது. ஆனால், 1300 செவிலியர்கள் மட்டுமே பணியாற்றி உள்ளனர். இதில் நிர்வாகப் பணியில் உள்ள செவிலியர்களும் அடங்குவர். விதிகளின்படி மொத்தம் 3600 செவிலியர்கள் இருக்க வேண்டும். மத்திய அரசின் கீழ் உள்ள பெரிய மருத்துவமனைகளில் ஜிப்மரும் ஒன்றாகும்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் 2350 படுக்கை வசதிக்கு 4500 செவிலியர்களும், சண்டீகர் பிக்மரில் 1800 படுக்கை வசதிக்கு 2700 செவிலியர்களும் உள்ளனர்.
ஜிப்மரில் நிலவும் செவிலியர் தட்டுப்பாட்டால் கடும் மனஉளைச்சலுடன் செவிலியர்கள் பணிபுரியும் நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதல் வேலைப் பளுவால் செவிலியர்களே நோய்வாய்ப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
செவிலியர்களுக்கு கிடைக்க வேண்டிய விடுமுறை, ஓய்வு நேரம்கூட கிடைப்பதில்லை. இதனால், நோயாளிகளுக்கும் உரிய சேவை கிடைப்பதில்லை. செவிலியர் நியமனம் தொடர்பாக பலமுறை சங்கம் சார்பில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் பலனில்லை. இதனால் 'நாங்கள் போராட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்' எனக் கூறி ஜிப்மர் நிர்வாக கட்டடம் முன் செவிலியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கோஷங்களை எழுப்பினர். பின்னர், போலீஸாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செவிலியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பினர். செவிலியர்கள் போராட்டம் காரணமாக ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
'எங்களது கோரிக்கைகளை மத்தியஅரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சங்கம் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும்' என்று செவிலியர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

SCROLL FOR NEXT