தமிழ்நாடு

அரசு இணையதளத்தில் அமைச்சர்கள் தொடர்பு விவரங்கள் நீக்கம்: முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்

DIN

தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி நீக்கப்பட்டது குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
மதுரை வேளாண் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய வாழைத் திருவிழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்து தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். மேலும், அனைத்து வகுப்புகளின் பாடத் திட்டங்களை மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து வகுப்புகளின் பாடத் திட்டங்கள் முழுமையாக மாற்றப்படும்.
தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி நீக்கப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது. அதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT