தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகளை ஆக.31-க்குள் ஏன் நிறைவு செய்யக் கூடாது?: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

DIN

தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆகஸ்ட் 31 -ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய ஏன் முயற்சிக்கக்கூடாது என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் கடந்தாண்டு அக்டோபரில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகளின் பதவி காலத்தை நீட்டித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு, நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை எனக் கூறி தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்பட உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ப்போது தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆகஸ்ட் 31 -ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய ஏன் முயற்சிக்கக்கூடாது என மாநில தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது ஆஜரான மாநில தேர்தல் ஆணைய தரப்பு மூத்த வழக்குரைஞர் பி.குமார், 'அது நடைமுறை சாத்தியமற்றது என்றார். புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாராக உள்ளது. ஆனால், கடந்தாண்டு டிசம்பரில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் உள்ள சில அம்சங்களே தேர்தல் அறிவிப்பாணை வெளியிட தடையாக உள்ளது' என்றார்.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 26 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT