முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தின் நீட் மசோதா எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை: நிர்மலா சீதாராமன்

தமிழகம் நிறைவேற்றிய நீட் மசோதா எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:29 PM
பகிர்:


சென்னை: தமிழகம் நிறைவேற்றிய நீட் மசோதா எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய மசோதா குறித்து, தமிழக அரசு மத்திய அரிசிடம் பேசியது தொடர்பான விவகாரம் எந்த நிலையில் இருக்கிறது என்பது தெரியவில்லை.

அது எந்த நிலையில் இருக்கிறது என்று தெரிந்தால்தான் அது பற்றி கருத்துத் தெரிவிக்க முடியும் என்று கூறினார்.

மேலும், பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி குறித்து முழுமையாக தெரிந்து கொண்ட பிறகுதான் கருத்துக் கூற முடியும் என்றும் தெரிவித்தார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →