தமிழ்நாடு

புதுச்சேரியில் மருத்துவ கலந்தாய்வு: ஆளுநர் கிரண்பேடி ஆய்வு

DIN

புதுச்சேரி அரசு, சென்டாக் மூலம் 293 மருத்துவ இடங்களை நிரப்பும் வகையில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையில் கலந்தாய்வு நடத்துகிறது. 

2ம் நாளாக நடந்து வரும் மருத்துவ கலந்தாய்வை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு செய்துள்ளார். கலந்தாய்வு தொடர்பான தகவல்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு முக்கயத்துவம் தர வேண்டும் என பெற்றோர்கள் ஆளுநர் கிரண்பேடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீட் முடிவுக்கு தமிழகத்துக்கு விலக்களிக்கும் வகையில் தமிழக அரசு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. தவிர, மாநில பாடத் திட்டத்தின் கீழ் 85 சதவீத மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்த நீதிமன்ற தீர்ப்புக்காகவும் நாம் காத்திருக்கிறோம்.

இதில் முடிவு தெரியும் வரை புதுச்சேரி அரசு காத்திருக்காமல், அவசர நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக சென்டாக் மருத்துவக் கலந்தாய்வை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

‘ஊழல்’ பணம் ஏழைகளுக்கு திருப்பித் தரப்படும்-பிரதமா் மோடி

SCROLL FOR NEXT