தமிழ்நாடு

அரசு இணையதளம்: பழைய முகங்களுடன் காட்சி அளிக்கும் தமிழக எம்.பி.க்கள் பட்டியல்

DIN

தமிழக அரசு இணையதளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த, பதவிக் காலம் முடிந்த மாநிலங்களவை உறுப்பினர்களின் பெயர், புகைப்படங்கள் கடந்த ஓராண்டாக இடம்பெற்றுள்ளன. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் 'அப்டேட்' செய்யப்படாதது வியப்பாக உள்ளது. தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சில மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது. வில்லியம் ரபி பெர்னாட், பால் மனோஜ் பாண்டியன் (அதிமுக), கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு (திமுக), சுதர்சன நாச்சியப்பன், மணி சங்கர் ஐயர் (காங்கிரஸ்) ஆகியோரது பதவிக் காலம் கடந்த ஆண்டு ஜூனில் முடிவடைந்தது.
புதிய உறுப்பினர்கள்: பதவிக் காலம் முடிவடைந்த உறுப்பினர்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர்கள் கடந்த ஆண்டு ஜூனில் தேர்வு செய்யப்பட்டனர். ஏ.விஜயகுமார், ஆர்.வைத்திலிங்கம், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் (அதிமுக), ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக) ஆகியோர் மாநிலங்களவையின் புதிய உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டு பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்களது பெயர்கள், புகைப்படங்கள், அடிப்படைத் தகவல்கள் ஆகியன தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இல்லை. இதற்குப் பதிலாக ஏற்கெனவே பதவிக் காலம் முடிவடைந்த உறுப்பினர்களின் பெயர்களும், புகைப்படங்களுமே இடம்பெற்றுள்ளன.
இந்த இணையதளத்தை தேசிய தகவலியல் மையம் (என்ஐசி) பராமரித்து வருகிறது. ஓராண்டாகியும் புதிய எம்.பி.,க்கள் குறித்த விவரம் புதுப்பிக்கப்படாமல் இருப்பது பல்வேறு தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT