தமிழ்நாடு

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை: கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதில்

DIN

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று மாநிலங்களவை திமுக குழு தலைவர் கனிமொழிக்கு, கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறைக்கான மத்திய இணையமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.
கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் காலத்தைக் கண்டறிய அவை ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனவா என்று நாடாளுமன்றத்தில் கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு மத்திய இணையமைச்சர் மகேஷ் சர்மா எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் 2 மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள பீடா அனலிடிக் என்ற நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டன. அதில் ஒரு பொருள் தற்போதைய காலத்திலிருந்து 2,160 ஆண்டுகள் முற்பட்டதாக இருக்கலாம் என்றும், இரண்டாவது பொருள் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT