தமிழ்நாடு

சென்னை உட்பட வடதமிழகத்துக்கு மழை வாய்ப்பு; இன்று இயற்கையே ஏசியாகும்!

DIN

சென்னை மற்றும் டெல்டா வரையிலான வட தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வானிலை நிலவரங்களை கணிக்கும் போது, இன்று சென்னை மற்றும் வட தமிழகத்தில் பரவலாக மற்றும் நல்ல மழை பதிவாக வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

கடந்த முறை போல 1000% என்று சொல்ல மாட்டேன், ஆனால், நிச்சயம் இன்று இரவு சென்னை உட்பட வட தமிழகத்துக்கு நல்ல மழை உள்ளது. சென்னை நகரத்தைக் கடந்து கடற்காற்று வீசுகிறது. வேலூர் பகுதியில் மேகக் கூட்டங்கள் அதனுடன் கலக்கக் காத்திருக்கின்றன.

இன்று இரவு சென்னையில் மழை தொடங்கி, சில மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயற்கையே ஏசி போடுவது போல சென்னை நகர மக்கள் உணரும் நாள் இன்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

SCROLL FOR NEXT