தமிழ்நாடு

சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி 2 வது நாளாக தொடர்கிறது

சென்னை தி நகரில் தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

DIN

சென்னை: சென்னை தி நகரில் தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் புதன்கிழமை (மே 31) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து நடந்த கட்டடத்தின் அருகில் உள்ள மற்ற கடைகளின் வியாபாரிகளையும், அடுத்தடுத்த கடைகளில் பணியாற்றிய பணியாளர்களையும் அப்பகுதியில் உள்ள கடைகளுக்குச் செல்ல காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. இதனால் பல சிறு வியாபாரிகள், பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாழ்வாதாரத்தை காப்பாற்ற கட்டட இடிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை தியாகராய நகர் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து ஜா கட்டர் எந்திரங்கள் கொண்டு கட்டடத்தின் பின்புற பகுதி இடிக்கப்பட்டு வருகிறது. 3 நாட்களில் கட்டிடம் முழுமையாக இடிக்கப்படும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT