தமிழ்நாடு

சென்னை சில்க்ஸ் அருகே உள்ள ஓட்டலில் தீ விபத்து

சென்னை தி.நகரில் சென்னை சில்க்ஸ் அருகே உள்ள ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

DIN

சென்னை: சென்னை தி.நகரில் சென்னை சில்க்ஸ் அருகே உள்ள ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் சென்னை சில்க்ஸ் அருகே உள்ள உணவகத்தில் உள்ள சமையலறையில் இருந்து திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் இருந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் சில நிமிடங்களில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

கடந்த புதன்கிழமை (மே 31) அதிகாலை 4.45 மணியளவில் சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் ஜவுளி கடை மற்றும் நகைக்கடை முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. தீ விபத்தில் சேதம் அடைந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தும் பணிதொடர்ந்து நடந்து வருகிறது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்கள் கட்டிடத்திற்குள் இருப்பதால் எந்நேரமும் தீ விபத்து ஏற்படலாம் என கருதி தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் அருகே உள்ள ஓட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அருகில் இருந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதையடுத்து அதிர்ஷ்டவசமாக பெரிய தீ விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

SCROLL FOR NEXT