தமிழ்நாடு

விவசாயிகள் கடன் தள்ளுபடி: மத்திய அரசு கைவிரிப்பது நியாயமல்ல

DIN

விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு மாநிலங்களுக்கு உதவ முடியாது என மத்திய அரசு தெரிவித்திருப்பது நியாயமல்ல என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தொழில் அதிபர்களும், பெரு நிறுவனங்களும் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை வசூலிக்க முடியாததால், கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை மத்திய அரசு வழங்கி உள்ளது. பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளில் ரூ.9,000 ரூபாய் கடன் பெற்று ஏமாற்றிவிட்டு, வெளிநாடு சென்றுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவிடம் வங்கிக் கடனை வசூலிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது.
இந்த நிலையில், விவசாயிகளின் வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்தால் பணவீக்கம் அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கூறுவதும், விவசாயிகளின் வங்கிக் கடன் தள்ளுபடிக்கு மத்திய அரசு உதவ முடியாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருப்பதும் நியாயமல்ல.
விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு மாநிலங்களின் நிதிச் சுமைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT