தமிழ்நாடு

டி.டி.வி.தினரனுக்கு முன்னிலை தந்தால்  மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு: முதல்வரை முற்றுகையிட்ட எம்.எல் ஏக்கள்!

டி.டி.வி.தினகரனுக்கு முன்னிலை தந்தால்  மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் குறிப்பிடும் கட்சிக்கு ஆதரவு தருவோம் என்று முதல்வர் பழனிசாமியை சந்தித்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல் ஏக்கள் வற்புறுத்தியதாக.

DIN

சென்னை: டி.டி.வி.தினகரனுக்கு முன்னிலை தந்தால்  மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் குறிப்பிடும் கட்சிக்கு ஆதரவு தருவோம் என்று முதல்வர் பழனிசாமியை சந்தித்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல் ஏக்கள் வற்புறுத்தியதாக தெரிகிறது 

முதல்வர் பழனிசாமியை தலைமைச் செயலத்தில் இன்று டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சந்தித்து பேசினார்கள். சந்திப்புக்குப் பின்னர் அவர்கள் பேசிய விஷயங்களாக தெரிய வருபவையாவன:

கட்சியில் தினகரனுக்குத்தான் முன்னிலை தரவேண்டும். விரைவில் நடக்க உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவானதுஅவரது தலைமையில் தான் நடக்க வேண்டும்.

அதேபோல டி.டி.வி.தினகரனுக்கு முன்னிலை தந்தால்  மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் குறிப்பிடும் கட்சிக்கு ஆதரவு தருவோம்.

அதிமுக சார்பாக வருடா வருடம் நடக்கும் 'இப்ஃதார்' நோன்பு திறப்பு நிகழ்ச்சியானது இந்த வருடம் தினகரன் தலைமையில்தான் நடைபெற வேண்டும்., 

சுருக்கமாக கட்சிக்கு அவர்தான் முன்னிலையாக இருந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு தினகரன் ஆதரவு எம்.எல் ஏக்கள் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

சீரடைகிறது இண்டிகோ விமான சேவை முடக்கம்! பயணிகளுக்கு ரூ.610 கோடி திருப்பியளிப்பு!

நிலப்பிரச்னை: விவசாயி தீக்குளித்து தற்கொலை!

கரோனாவுக்குப் பிறகு 4 மடங்கு அதிகரித்த இதய நாள தளா்ச்சி! தமிழக மருத்துவா்கள் ஆய்வு!

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

SCROLL FOR NEXT