தமிழ்நாடு

சென்டாக் உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி பதவி விலக பாஜக வலியுறுத்தல்

தினமணி

சென்டாக் வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவு எதிரொலியாக தார்மீக பொறுப்பேறறு முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி பதவி விலக வேண்டும் என பாஜக மாநில தலைவர் வி.சாமிநாதன் கூறியுள்ளார்.

புதுவையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்டாக் மருத்துவ பட்டமேற்படிப்பு விவகாரத்தில் புதுச்சேரி மாணவர்கள் கடும் பாதிப்படைந்தனர். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீட்டில் தேர்வான மாணவர்கள் சேரமுடியாத நிலை இருந்தது. மாநில அரசு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு ஆதரவாக செயல்பட்டது.

மாணவர்கள் செய்த புகாரையடுத்து ஆளுநர் கிரண்பேடி மேற்கொண்ட முயற்சியால் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு இடைக்கால உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் தற்காலிக கல்விக் கட்டணம் செலுத்தி மாணவர்கள் சேரலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுளளது.

மாணவர்கள் நலனுக்கு எதிராக செயல்பட்ட முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி தார்மீக பொறுப்பேற்று பதவியை விட்டு விலக வேண்டும். அரசின் மீது நம்பிக்கை இல்லை எனறால் ஆளுநர் புதுவையை விட்டு வெளியேறலாம் என நாராயணசாமி கூறியுள்ளார். அவ்வாறு கூற அவருக்கு எந்த தகுதியும் இல்லை. 

கடந்த ஓராண்டாக அனைத்து வகையிலும் தோல்வி அடைந்துள்ள காங்கிரஸ் அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர் தான் பதவியை விட்டும், புதுவையை விட்டும் வெளியேற வேண்டும்.

மருத்துவ பட்டமேற்படிப்பு விவகாரத்தில் ஏற்கெனவே ஆண்ட, தற்போது ஆளும் கட்சிகள் பல கோடி முறைகேடுகள் புரிந்துள்ளன. இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோருவோம்.

முன்பு காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டிருந்த ஆளுநர் கட்டாரியாவுக்கு முழு அதிகாரம் உண்டு எனக்கூறி வந்த நாராயணசாமி, தற்போது புதுச்சேரியில் துணைநிலை  ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறுவேதேன்?

மேலும் ஆளுநரின் அதிகாரத்தை குறைக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது எதற்காக?, ஆளுநரின் அதிகாரத்தை குறைக்க நாடாளுமன்றத்தால் தான் முடியும். அது எந்த காலத்திலும் நடைபெற வாய்ப்பில்லை.

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் விவகாரம் தொடர்பாக புதுவை பாஜக தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியது. ஆனால் மாநில அரசு தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக உள்ளது. அக்கட்சியின் அரசியல்வாதிகள் தான் பெரும்பாலான பள்ளிகளை நடத்தி வருகின்றனர்.

அரசு தரும் நிர்ப்பந்தத்தால் தான் நீதிபதி தலைமையிலான கட்டணக்குழு மெதுவாக இப்பணியை மேற்கொள்ளும் நிலை உருவாகி உள்ளது. தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் தொடர்பாக ஆளுநர் நடவடிக்கை எடுக்க முறையிடுவோம். தேவைப்பட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றார் சாமிநாதன். நிர்வாகிகள் ரவிச்சந்திரன், தங்க. விக்ரமன் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT