தமிழ்நாடு

முதுநிலை மாணவர் சேர்க்கை ரத்து: அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் டாக்டர் ராமலிங்கம், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்து தடை பெற வேண்டும். நிரந்தரத் தீர்வாக அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்கும் அவசர சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.
சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் பாலகிருஷ்ணன், முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான அவசரச் சட்டத்தை, நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் உள்ள உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான அனைத்து இடங்களையும் மத்திய அரசே நிரப்புகிறது. இதில் 50 சதவீத இடங்களை மாநில ஒதுக்கீட்டுக்காகப் பெற வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை

மணல் குவாரி முறைகேடு: விரிவடையும் விசாரணை!

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT