தமிழ்நாடு

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

DIN

பகுதி நேர ஆசிரியர்களை பள்ளி கல்வித் துறைக்கு மாற்றி அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் கடந்த 2012 -ஆம் ஆண்டில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 -ஆம் வகுப்பு முதல் 8 -ஆம் வகுப்பு வரை 16,549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
இவர்களுக்கு ரூ.7 ஆயிரம் மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மிகக் குறைந்த ஊதியத்தால் கடும் சிரமங்களைச் சந்தித்து வரும் அவர்கள், தங்களை பள்ளி கல்வித் துறைக்கு மாற்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கடந்த 8 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
அண்மையில் இவர்கள், பள்ளி கல்வித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர். அப்போது ரூ.700 ஊதிய உயர்வும், பணியிட மாறுதலும் வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
ஆனால், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பள்ளி கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது பகுதிநேர ஆசிரியர்கள் குறித்த அறிவிப்புகள் எதுவும் வரவில்லை. இது மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
எனவே, அவர்களை பள்ளி கல்வித் துறைக்கு மாற்றி பணி நிரந்தரம் செய்வதற்கான அறிவிப்பை, நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே செய்ய வேண்டும் என்று வாசன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT