தமிழ்நாடு

மாணவர் கொலை செய்யப்படவில்லை: பிரேத பரிசோதனையில் தகவல்

தினமணி

மதுரையில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரபாண்டியன் மகன் சுந்தரபாண்டியன் (16). மதுரை நரிமேட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பதினோறாம் வகுப்பு சேர்க்கைக்காக சனிக்கிழமை பள்ளிக்குச் சென்றவர் பகல் ஒரு மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது சுந்தரபாண்டியன் முகத்தில் காயங்கள் இருந்துள்ளன.

இதுகுறித்து அவரது தாயார் அமுதா கேட்டபோது கீழே தவறி விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். படுக்கைக்குச் சென்ற அவர் சில நிமிடங்களில் பேச்சு மூச்சு இல்லாமல் கட்டிலில் இருந்து கீழே விழுந்து கிடந்துள்ளார். இதையடுத்து அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் சுந்தரபாண்டியன் இறந்தார்.தல்லாகுளம் போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சுந்தரபாண்டியன் உடல் பிரேத பரிசோதனை ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் சுந்தரபாண்டியன் கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறியது:
சுந்தரபாண்டியனின் முகம், முழங்கை, கழுத்து ஆகிய பகுதிகளில் சிராய்ப்பு காயங்கள் இருந்தன. இது கீழே விழுந்ததால் ஏற்பட்டிருக்கலாம். உடலில் வேறு வெட்டு, குத்து காயங்கள் இல்லை. சிராய்ப்பு காயங்களால் ஒருவருக்கு மரணம் ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் சுந்தரபாண்டியனின் இதயம் சாதாரணமாக ஒருவருக்கு இருக்கும் அளவைவிட பெரிதாக உள்ளது. அதனால் அவரது இதயம் மருத்துவக் கல்லூரியில் உள்ள நோய்க்குறியியில் துறையின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆய்வுக்குப்பின்பு அவருக்கு இருந்த நோயின் பாதிப்பு பற்றியும் மரணத்துக்கான காரணம் பற்றியும் தெரியவரும். பிரேத பரிசோதனைப்படி பார்க்கும்போது சுந்தரபாண்டியன் கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

SCROLL FOR NEXT