தமிழ்நாடு

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை ரத்து: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

DIN

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்துள்ள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்துள்ளது.
கிராமப்புற பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையின்போது சலுகை மதிப்பெண் வழங்கும் வகையில் தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட ஆணையை ட கடந்த ஜூன் 16-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்பட்ட கலந்தாய்வை ரத்து செய்து, புதிய தகுதிப் பட்டியலை தயார் செய்து மூன்று நாள்களுக்குள் வெளியிட வேண்டும்; முதுநிலை மருத்துவப் படிப்புக்கு புதிதாக கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தற்போது
மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT