தமிழ்நாடு

அரவக்குறிச்சியில் கரூர் காகித ஆலையின் 3 -ஆவது அலகு: அமைச்சர் மணியன்

DIN

அரவக்குறிச்சியில் கரூர் காகித ஆலையின் மூன்றாவது அலகை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் சனிக்கிழமை கேள்வி நேரத்தின்போது, அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. வி.செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார். அப்போது அவர் மலைக்கோவிலூர் கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், இந்த ஆலையின் குவிந்த நட்டம் அதிகமாக இருப்பதால், கடந்த 2012 -இல் ஆலையானது கலைக்கப்பட்டு, அதிலுள்ள இரும்புப் பொருள்கள் ஏலம் விடப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. நிலம் மட்டும் எஞ்சியுள்ளது என்றார்.
இதைத்தொடர்ந்து, துணைக்கேள்வி எழுப்பிய உறுப்பினர் செந்தில் பாலாஜி, கூட்டுறவு நூற்பாலை அமைந்திருந்த 51.33 ஏக்கர் நிலத்தை தொழில் துறையிடம் ஒப்படைத்து தமிழ்நாடு காகித ஆலையின் மூன்றாவது ஆலையை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் மணியன், புதிய தொழிற்சாலை உருவாக்குவது குறித்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT